ஆர்ஜேடியில் இருந்து விலக போவதாக அறிவித்த லாலு மகள்!! ரமேஸ், சஞ்சய் தான் காரணமா??

By :  G Pradeep
Update: 2025-11-17 15:41 GMT

ராஷ்டிரிய ஜனதா தளத்தின் நிறுவனர் லாலுவின் மகள் ரோஹிணி ஆச்​சார்யா பீகார் குடும்பம் ஆர்ஜேடியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து இதற்கு முக்கிய காரணம் ரமீஸ் நிமத் மற்​றும் சஞ்​சய் யாதவ்​தான் எனக் கூறப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்கள் இருவரும் தேஜஸ்​வி​யின் அரசியல் குழுவில் மிகவும் முக்கியமான பங்கு வகித்து வருவதாகவும், தேஜஸ்வியின் கிரிக்கெட் கிளப்பில் ரமீஸும் இருந்து வந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் நட்பு ஏற்பட்டு அதன் பிறகு ரமீஸ் அரசியலுக்கு வந்ததாக கூறப்படுகிறது. 


ரமீஸ் அரசியல் வியூகம் அமைக்கும் தளத்திற்கு பொறுப்பாளராக இருந்து வந்ததாகவும், சகோதரி ரோகினியின் ஆதரவாளர்களில் ஒருவருக்கு கூட தேஜஸ்வி தேர்த் சீட் அளிக்கவில்லை என்பது பெரும் பிரச்சனையாக தோன்றியது. இதைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு பல்​ராம்​பூரின் துளசிபூர் நகர் பஞ்​சா​யத் தலை​வர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் கைதான ரிஸ்​வான், ஜைபா, ரமீஸை​யும் கைது செய்​தனர். 


அதன் பிறகு ஜாமினில் ஜைபா, ரமீஸ் ஆகியோர் வெளிவந்தனர். ரமீஸ் மீது துளசிபூர், கோக்ராஜ் காவல் நிலையங்களில் 12 வழக்குகள் இருக்கும் நிலையில் மாமா​னார் ரிஸ்​வான் மூலம் சமாஜ்​வாதி தலை​வர் அகிலேஷை ரமீஸ் சந்தித்து வந்துள்ளார். அரசியல் ஆலோசகராக இருந்து வந்த அகிலேஷ் யாதவ் தேஜஸ்வி கேட்டுக்கொண்டதன் படி கடந்த 2012 ஆம் ஆண்டு ஆர்ஜேடியில் இணைந்து 2024 ஆம் ஆண்டு மாநிலங்களவை எம்பியாக பொறுப்பேற்றார். இதனால் ரோகிணி குடும்பம் கட்சியிலிருந்து விலகுவதாக கூறியுள்ளது தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News