பாஜக-வை எதிர்த்தால் இதுதான் நிலைமை!! தவெக தலைவர் விஜய்க்கு எச்சரிக்கை விடுத்த அண்ணாமலை!!
பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றியினை கண்டுள்ளது. 243 தொகுதிகளில் பாஜக, ஜக்கிய ஜனதா தளம், எல்ஜேபி ஆகிய கட்சிகளின் தேசிய ஜனநாயக கூட்டணியானது 202 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி கட்சியினை தோற்கடித்துள்ளது. மேலும் பிரசாந்த் கிஷோரின் கட்சியான ஜன் சுராஜ் டெபாசிட் இழந்து படுதோவ்வி அடைத்துள்ளது. பிரசாந்த் கிஷோர் தொடர்ச்சியாக பாஜகவை எதிர்த்து வந்த நிலையில் தற்பொழுது மோசமான தோல்வியை எதிர்கொண்டுள்ளார்.
அதேபோல தமிழகத்தில் தவெக கட்சி தலைவர் விஜய்க்கும் இதே நிலைமை ஏற்படும் என்று தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மேலும் அண்ணாமலை தவெக தலைவர் விஜய் எப்போதும் பாஜகவை எதிர்ப்பதையே வேலையாக வைத்துள்ளார். தேர்தல் ஆணையம் தற்பொழுது நடத்திவரும் SIR பணிகளை பாஜகவுடன் சேர்த்து வைத்து எதிர்ப்பதாக கூறுகிறார். இதுபோன்று வெறுப்புகளை தெரிவிப்பது மட்டும் அரசியல் என்று நினைத்துக் கொண்டுள்ளார். ஆனால் மக்கள் இதை பார்த்து ஓட்டு போட போவதில்லை.
மாறாக நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் என்றும் என்ன நலன்கள் செய்யப்போகிறீர்கள் என்றும் தான் பார்ப்பார்கள். இதே போல பலமுறை ராகுல் காந்தியும் பாஜகவுடன் எதிர்ப்பை வெளிக்காட்டி 95 தேர்தல்களில் தோல்வியை சந்தித்தார். இப்பொழுது விஜய்யும் அதேதான் செய்து வருகிறார்.
அவருக்கும் பிரசாந்த் கிஷோரின் நிலை ஏற்படும் என்றும், பிரசாந்த் கிஷோர் புது கட்சியை ஆரம்பித்து 238 தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். ஆனால் மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்காததால் அவருக்கு வாக்குகள் கிடைக்கவில்லை. அதேபோல தான் தற்பொழுது விஜய் கட்சியை ஆரம்பித்து விட்டு தொடர்ச்சியாக பாஜகவை செய்யாத தவறுகளை கூறி எதிர்த்து வருகிறார் என அண்ணாமலை கூறியுள்ளார்.