கார்த்திகை தீபத்திற்கு திருவண்ணாமலை மீது பக்தர்கள் அனுமதிக்கப்படுவது குறித்து வெளியான பரபரப்பு தகவல்!
கார்த்திகை தீபத் திருவிழா வரும் நவம்பர் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தொடங்கி 10 நாட்கள் தீபத்திருவிழா சாமி வீதி உலா மற்றும் தேர் திருவிழா நடைபெறும். இதில் மிக முக்கியமான நாள் மகா தீபம் ஆகும். இந்த மகா தீபம் ஆனது டிசம்பர் 3ம் தேதி காலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் மற்றும் மாலை 6 மணிக்கு 2,688அடி உயரமுள்ள மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.
இந்த திருநாளில் எல்லா வருடமும் மலை மீது சென்று தரிசனம் செய்வதற்கு ஆன்லைன் டிக்கெட் மூலம் குறிப்பிட்ட அளவு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த நிலையில் நேற்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நடத்திய முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீபத் திருவிழா குறித்த முன்னேற்பாடுகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கற்பகராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதில் சேகர்பாபு, பொதுப்பணி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சேகர் பாபு கடந்த வருடம் பெய்த மழையில் மண் ஈரப்பதம் ஆகி பாறை இறங்கிவிட்டதாக ஐஐடி நிபுணர்கள் மலையின் உறுதித் தன்மை குறைந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால்தான் கடந்த ஆண்டும் பக்தர்களை மலை மீது செல்வதற்கு அனுமதிக்காமல் இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு உரிய ஆய்வு நடத்திய பிறகு பக்தர்களை மலை மீது செல்வதற்கு அனுமதிப்பதற்கு முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.