பீகார் சட்டப்பேரவை தேர்தலில் ஆர்எஸ்எஸ் பாஜகவின் பின்னணியில் வேலை செய்ததா??
பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் 243 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி 202 இடங்களில் வெற்றி பெற்றது. மேலும் பாஜக 89, ஐக்கிய ஜனதா தளம் 85, லோக் ஜன சக்தி 19, பிற கட்சிகள் 9 இடங்களிலும், ராஷ்டிரிய ஜனதா தளம் 35 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில் பாஜகவிற்காக ஆர்எஸ்எஸ் அமைப்பானது பின்னணியில் செயல்பட்டு வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆர் எஸ் எஸ் அமைப்பானது பிஹார் தேர்தலுக்கு முன்பாக மிஷன் திரிசூல் என்கின்ற திட்டத்தின் மூலம் சுமார் 20000 ஆர் எஸ் எஸ் தொண்டர்களை பீகார் முழுவதும் செயல்பட வைத்ததாகவும், என் டி ஏ க்கு ஆதரவாக சூழ்நிலையை உருவாக்கி இந்து ஒற்றுமை வளர்ச்சி, வளர்ச்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆர்ஜேடியின் ஆட்சி குறித்து நினைவூட்டி, தேர்தல் நாளில் என் டி ஏ ஆதரவாளர்களை திரட்டி வாக்களிக்க வைப்பதற்கு செயல்பட்டதாக தெரிகிறது.
ஏற்கனவே மகாராஷ்டிரா அரியானா மற்றும் டெல்லி போன்ற சட்டப்பேரவை தேர்தல்களில் இதே போல தான் செயல்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் வாக்கு குறைவாக இருந்த தொகுதிகளை குறி வைத்து இந்த முறை கடினமாக செயல்பட்டு வாக்குச் சாவடிகளில் காலை 5 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் வரை இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம், பாரதிய மஸ்தூர் சங்கம், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட ஆர் எஸ் எஸ் அமைப்பின் பிரிவுகளுக்கு வேறு வகையில் பணிகளை மேற்கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், இந்த கட்சிக்காகவும் தாங்கள் செயல்படவில்லை என்றும், இல்ல வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்வதற்காகவும், வாக்காளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகவும் பணியாற்றியதாக ஒவ்வொரு தேர்தலிலும் தெரிவித்தார்.