டெல்லி குண்டுவெடிப்பில் வெடி மருந்து தயாரிப்பதற்கு மாவு அரைக்கும் இயந்திரத்தை பயன்படுத்தியதாக கிடைத்த தகவல்!
கடந்த நவம்பர் 10ஆம் தேதி டெல்லி செங்கோட்டை பகுதியில் நடந்த கார் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் கனாய் என்பவர் வெடிபொருள்களுக்கு பயன்படுத்தப்படும் ரசாயன பொருட்களை மாவு அரைப்பதற்கு பயன்படுத்தும் மெஷினில் தயாரித்து இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
புல்வாமா பகுதியில் தங்கி இருந்த வீட்டில் வைத்திருந்த இயந்திரத்தை பயன்படுத்தி யூரியாவை அரைத்து வெடிபொருள்களுக்கு ரசாயனங்களை தயாரித்ததாகவும், அதன் பிறகு ஹரியானாவில் வாகனம் ஓட்டுபவரின் வீட்டில் இருந்து மாவு மில் கிரைண்டர் உட்பட சில மின்னணு பொருட்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. கடந்த நவம்பர் 9ம் தேதி கவாய் தங்கி இருந்த வீட்டிற்கு அருகில் 360 கிலோ அம்மோனியம் நைட்ரேட் மற்றும் பிற வெடிபொருட்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
அல்-ஃபலாஹ் பல்கலைக்கழகத்தில் மருத்துவராக பணிபுரிந்த கவாய் வெடிபொருட்களை தயாரிப்பதற்கு நீண்ட காலமாக மாவும் இல்லை பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது. எனது சகோதரியின் திருமணத்திற்காக வைத்திருப்பதாக இயந்திரங்களை கூறிய நிலையில் இந்த உண்மை வெளிவந்துள்ளது. இதுகுறித்து NIA விசாரணை நடத்துவதற்காக டாக்ஸி ஓட்டுனரை காவலில் எடுத்துள்ளது. மேலும் அப்பல்கலைக்கழகத்தை சேர்ந்த அவருடைய இரண்டு சகாக்கள் - ஷஹீன் சயீத் மற்றும் ஆதீல் அகமது ரத்தர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.