பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டும்! தமிழக அரசை எதிர்த்து போராட்டத்தில் இறங்கிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்!
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. நிலையில் கோட்டை நோக்கி பேரணி என்ற பெயரில் எழும்பூர் எல்ஜி கார்டன் சாலையில் ஆரம்பித்து தெற்கு கூவம் சாலை வழியாக பேரணி நடத்தப்பட்டு ராஜரத்தினம் ஸ்டேடியம் சென்றடைந்தனர்.
இதில் இந்த இயக்கத்தின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.செல்வக்குமார், தமிழ்நாடு அரசு ஊழிய சங்க மாநில தலைவர் எஸ்.ரமேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்நிலையில் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் பி.பிரெடெரிக் ஏங்கல்ஸ், திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அளித்து நான்கு வருடங்களுக்கு மேல் ஆன நிலையில் வாக்குறுதியை இன்னும் செயல்படுத்தாமல் இருந்து வருகிறது.
பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு 22 ஆண்டுகள் ஆன நிலையில் 54000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற நிலையில் இன்னும் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாமல் உள்ளது. இமாச்சலப் பிரதேசம் ராஜஸ்தான் போன்ற சில மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் இன்னும் தமிழகத்தில் மட்டும் கொண்டுவரப்படாமல் உள்ளது.
தமிழக அரசு இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற தவறினால் டிசம்பர் மாதம் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப்படும் என்றும், இதன் பிறகு ஜனவரி மாதம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் செய்ய முடிவு எடுத்திருப்பதாக கூறியுள்ளார்.