எழும்பூர் டூ ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்க போகும் பிரதமர் மோடி!ரயில் பயணிகள் மகிழ்ச்சி!

By :  G Pradeep
Update: 2025-11-25 06:58 GMT

ராமேஸ்வரத்தில் அமைந்திருக்கும் ராமநாத சுவாமி கோவிலுக்கு பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் அதிகமாக வருவதால் அவர்களுக்காக போக்குவரத்து வசதியை அதிகப்படுத்தும் வகையில் வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஏற்கனவே பத்துக்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் பல இடங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் தற்பொழுது சென்னை எழும்பூரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வந்தே பரத் ரயில் இயக்க வேண்டும் என்று எழுந்த கோரிக்கையை செய்து தருவதற்கு இந்திய ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் வந்தே பாரத் ரயிலுக்கான தற்காலிக நேர அட்டவணையை வெளியிட்டுள்ளது. 

அதன்படி வாரத்தில் புதன்கிழமையை தவிர்த்து மற்ற ஆறு நாட்களிலும் ரயில் இயக்கப்படும் என்றும், சென்னை எழும்பூரில் காலை 5:30 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்தில் 5.50, விழுப்​புரம் சந்​திப்​பில் காலை 7.18, திருச்சி சந்​திப்​பில் காலை 9.15, புதுக்கோட்டையில் காலை 9.58, காரைக்​குடி சந்​திப்​பில் காலை 10.38, சிவகங்கையில் முற்​பகல் 11.13 மணி, ராம​நாத​புரத்​தில் நண்​பகல் 12.13 என சென்று இறுதியாக மதியம் 1:15 க்கு ராமேஸ்வரத்தை அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன் பிறகு மீண்டும் ராமேஸ்வரத்திலிருந்து மதியம் 2:30 மணி அளவில் எடுக்கப்படும் ரயிலானது ராமநாதபுரத்தில் 3.13, சிவகங்கையில் 4.08, காரைக்குடியில் 4.38, புதுக்கோட்டையில் 5.08, திருச்சியில் 6.05, விழுப்புரத்தில் 8.13 என இயக்கப்பட்டு அதே நாள் இரவு 10.20 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவையை அடுத்த மாதத்தின் இடையிலோ அல்லது இறுதியிலோ பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் ரயில் பயணிகள் தங்களுடைய ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். 

Tags:    

Similar News