ஆதார் கார்டு மோசடிகளை தடுப்பதற்கு புதிய நடவடிக்கை! டிசம்பர் மாதம் முதல் முறைக்கு வருவதற்கு வாய்ப்பு!
தனிநபர் அடையாள அட்டையான ஆதார் அட்டையை தவறாக தற்பொழுது பல இடங்களில் பயன்படுத்தி வருகின்றனர். அதனை தடுப்பதற்காக வரும் டிசம்பர் மாதத்தில் இருந்து புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்த இந்திய தனித்துவ அடையாள ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய ஆதார் அட்டையில் தனிநபரின் புகைப்படம் மற்றும் க்யூஆர் கோடு மட்டுமே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் யுஐடிஏஐயின் தலைமை செயல் அதிகாரியான புவனேஷ் குமார் ஆன்லைன் கருத்தரங்கில், ஆதார் அட்டை தற்பொழுது பல பொது இடங்களில் மக்களிடமிருந்து வாங்கப்படுவதாகவும், அதன் மூலம் தனி நபர் நிறுவனங்களுக்கு பொதுமக்களின் ஆதார் விபரங்கள் கிடைக்கின்றது. முக்கியமாக சிம் கார்டுகள் போன்ற சில பொருட்களை வாங்குவதற்கு ஆதார் கார்டுகள் வாங்கப்படுகிறது.
ஆனால் சிலர் ஆதார் கார்டுகளை வாங்கி தவறான முறையில் பயன்படுத்தி ஆன்லைன் மோசடிகளில் ஈடுபடுகின்றனர். இந்த மோசடிகளை தடுப்பதற்காக டிசம்பர் மாதத்தில் இருந்து மாற்றங்களுடன் கூடிய புதிய விதிகள் கொண்டு வருவதற்கு திட்டமிட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் எந்த இடத்திலும் பொதுமக்கள் ஆதார் கார்டை வழங்க அவசியம் இல்லை என்றும், ஆதார் செயலி மூலம் மட்டுமே டிஜிட்டல் முறையில் தகவல்களை அளிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது புகைப்படம் மற்றும் க்யூ ஆர் கோடு மட்டுமே வழங்கப்பட்டிருக்கும் என்றும், 12 இலக்க எண் அச்சிடப்படாது. ஆனால் அட்டைதாரரின் பெயர் இடம் பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அட்டையில் அட்டைதாரரின் வீட்டு முகவரி எதுவும் இடம்பெறாது என்றும், க்யூ ஆர் கோடினை அங்கீகரிக்கப்பட்ட செயலியால் மட்டுமே ஸ்கேன் செய்ய முடியும் என்பதால் பல மோசடிகள் கமல் தடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.