பாலியல் வழக்கில் சிக்கிய திமுக நிர்வாகி!! கைது நடவடிக்கை எடுப்பதில் தாமதம் காட்டி வரும் காவல்துறை!!
வானூர் ஒன்றியத்தை சேர்ந்த திமுக செயலாளர் பாஸ்கரன் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக கோட்டகுப்பம் மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இன்னும் அவரை கைது செய்யப்படவில்லை என்று சர்ச்சை எழுந்தது. இதைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட காவல்துறை தரப்பில் பாஸ்கரன் மீது பாலியல் புகார் அளித்த பெண்ணிடம் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
அவர்கள் பேசிய உரையாடல் பதிவுகள் கைப்பற்றப்பட்டு இருவருடைய செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தபோது சில முரண்பாடுகள் இருப்பதாக தெரிகிறது. இவ்வளக்கு தொடர்பாக சில சாட்சிகள் சேகரிக்க வேண்டும் என்றும், அது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தனர். அதன் பிறகு கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
இது குறித்து தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புவார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இந்நிலையில் காவல்துறை வெளியிட்டுள்ள இந்த அறிக்கை பலருக்கும் கேள்வியை எழுப்பி வரும் நிலையில் உறுதி செய்த பிறகு தான் கைது செய்யப்படும் என்று காவல்துறை தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
இதுபோன்று உறுதி செய்த பிறகு தான் சாமானிய மக்கள் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுக்கிறதா என்று சமூக வலைதளங்களில் பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் அவரை கைது செய்ய வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தலைமையில் விழுப்புரத்தில் அதிமுகவினர் மெழுகுவர்த்தி ஏத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.