சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு!! கே.எஸ்.பைஜுவின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த விஜிலென்ஸ் நீதிமன்றம்!!

By :  G Pradeep
Update: 2025-11-30 09:31 GMT

சபரிமலை ஐயப்பன் சாமி கோவிலில் இருக்கும் துவார பாலகர்கள் சிலையில் பூசப்பட்டிருந்த தங்க கவசம், கதவில் வைத்திருந்த தங்க தகடுகள் போன்றவை திருட்டுப் போனதாக கூறப்பட்ட நிலையில் இரண்டு வழக்குகள் கேரள உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் தொடரப்பட்டு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. 

அதன்படி நடத்தப்பட்ட சிறப்பு விசாரணையில் திருவாபரணம் ஆணையர் கே.எஸ்.பைஜுவிடம் கொல்லம் விஜிலென்ஸ் நீதிமன்றம் அளித்த அனுமதியின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது. கோவிலின் தங்க கவசங்களை எடுத்து செல்வதற்கு உன்னிகிருஷ்ணனை அனுமதித்ததில் பின்பற்றப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கே.எஸ். பைஜுவிடம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தப்பட்டு வந்ததாக விசாரணை குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் கதவு நிலைகளில் இருந்த தங்க தகடுகள் திருடு போன இரண்டாவது வழக்கில் கே.எஸ். பைஜுவின் ஜாமின் மனுவை விஜிலென்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

Tags:    

Similar News