சேவா தீர்த் என மாற்றப்பட்ட பிரதமர் அலுவலகத்தின் புதிய பெயர்!! வெளியாகி உள்ள தகவல்!!

By :  G Pradeep
Update: 2025-12-02 15:33 GMT

மத்திய அரசின் துறைகளுக்காக சென்ட்ரல் விஸ்டா மறுவடிவமைப்பு திட்டத்தின் படி டெல்லியில் சவுத் பிளாக்கில் பிரதமர் அலுவலகம் மற்றும் பல்வேறு அமைச்சகங்கள் ஆகியவற்றிற்காக புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வரும் நிலையில் புதிய பிரதமர் அலுவலகத்திற்கு சேவா தீர்த் என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

சேவா தீர்த் என்பது சேவைகளை வழங்கும் புனித இடம் என்பது பொருளாகும். பிரதமர் அலுவலகம் என்பது அதிகாரத்திற்கான இடம் அல்ல என்றும், குடி மக்களுக்கு முன்னுரிமை வழங்கக்கூடிய இடம் என்பதை உணர்த்துவதற்காக இந்த பெயர் வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 

ஏற்கனவே டெல்லி ராஜ் பத் என்பதை கர்த்தவ்ய பத் அதாவது கடமைக்கான பாதை என்று மாற்றப்பட்டது. இந்த நிலையில் தற்பொழுது பிரதமர் அலுவலகத்தின் பெயர் மாற்றப்பட்டிருப்பது சேவையை உணர்த்தும் வகையில் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News