கையெழுத்தான முத்தரப்பு ஒப்பந்தம்!! அயோத்தியில் புதிதாக சர்வதேச தரத்தில் வரப்போகும் அருங்காட்சியகம்!!
அயோத்தி ராமர் கோவிலை சர்வதேச அளவில் மேம்படுத்துவதற்காக கோவில் அருங்காட்சியகம் அமைப்பதற்காக கடந்த செப்டம்பர் 3ம் தேதி மத்திய அரசுடன் உத்திரபிரதேச அரசும், டாடா சன்ஸ் நிறுவனமும் இணைந்து முத்தரப்பு ஒப்பந்தம் கையெப்பமிட்டது. இதற்காக மஞ்சா ஜம்தாரா கிராமத்தில் 25 ஏக்கர் நிலம் 90 ஆண்டுகள் குத்தகைக்கு எடுக்கப்பட்டது.
இந்த அருங்காட்சியகத்தை மிகவும் பிரம்மாண்டமாக கட்டுவதற்கு டாடா சன்ஸ் நிறுவனம் கூடுதல் நிலம் கேட்டதை தொடர்ந்து உத்திரபிரதேச அரசு 27.102 ஏக்கரில் மேலும் வழங்கி மொத்தமாக 52.102 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்து முதல்வர் ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை முதல் அளித்துள்ளது. டாடா சன்ஸ் சிஎஸ்ஆர் நிதியை வைத்து இந்த அருங்காட்சியகத்தை உருவாக்கப் போவதாக பொறுப்பேற்றுள்ளது.
இதனால் பகுதியில் இருக்கும் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும், இந்த அருங்காட்சியகமானது அயோத்தியின் கலாச்சார அடையாளமாக இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் அயோத்தியின் சுற்றுலா வளர்ச்சியை இமயப்படுத்தும் வகையிலும் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பிரதேசத்தின் சுற்றுலாத்துறை முதன்மைச் செயலாளர் அம்ரித் அபிஜத், அயோத்தியில் பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் வரை பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்த வகையில் அயோத்தியில் உள்ள கலாச்சார இடங்களை விரிவு படுத்துவதில் இந்த அருங்காட்சியக முக்கியமான இடத்தை பெரும் என்று கூறினார். இத்தகைய அருங்காட்சியகத்தை டாடா சன்ஸ் நிறுவனம் திராவிட பாணி கட்டிடக்கலையில் சர்வதேச நிபுணத்துவம் நிறைந்ததாக அமைக்கப் போவதாக தெரிவித்தார்.