இந்துவிலிருந்து கிறிஸ்தவத்திற்கு மாறிய பட்டியல் இனத்தவர்களுக்கு சலுகைகள் இல்லை! உ.பி அரசுக்கு நீதிமன்ற உத்தரவு!
ஜிதேந்திர சஹானி என்னும் உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர் ஹிந்து மதத்திலிருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மதம் மாறிவிட்டு இந்து கடவுள்களைப் பற்றி அவதூறு பரப்பி வந்த நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அவருடைய சொந்த இடத்தில் இயேசு பற்றி பிரசங்கம் செய்து வருவதாகவும் அவர் மீது செய்யப்பட்டிருக்கும் குற்ற பத்திரிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும், வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நிலையில், சஹானியின் மனுவில் அவர் இந்து மதத்தை சேர்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அவர் கிறிஸ்துவ மதத்திற்கு மதம் மாறி உள்ளார். அவர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறுவதற்கு முன்பாக பட்டியல் இனத்தை சேர்ந்தவராக இருந்து வந்துள்ள நிலையில் அதன் பிறகு கிறிஸ்துவ மதத்திற்கு மாறியதும் சட்டப்படி அவருக்கு பட்டியலினத்தை சேர்ந்த சலுகைகள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும் என்பதை உத்திரபிரதேச அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
அதை செய்யாவிட்டால் அரசியலமைப்பு சட்டத்தில் மோசடி செய்ததற்கு சமமாகும். எனவே அரசு இதில் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சாதிமுறைகள் கிறிஸ்துவ மதத்தில் இல்லாத நிலையில் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவர்களுக்கு பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளுக்கும் இடமில்லை.
அப்படி வசதிகளை பெற்றால் அதுவும் மோசடியாகும். எனவே இந்த விவகாரத்தில் நான்கு மாதங்களுக்குள் மாவட்ட ஆட்சியர் இதுபோன்று செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும்படி கூறப்பட்டுள்ளது.