பாபர் மசூதியை மேற்கு வங்கத்தில் கட்டப் போவதாக தெரிவித்த திரிணாமுல் காங்கிரஸின் எம்.எல்.ஏவால் ஏற்பட்ட பரபரப்பு!!
மேற்கு வங்கம் திரிணாமுல் காங்கிரஸின் பரத்பூர் தொகுதி எம்.எல்.ஏ ஹிமாயூன் கபீர் முர்ஜிதாபாத் அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதியை மீண்டும் கட்டப் போவதாகவும், அதற்கு டிச.6 அடிக்கல் நாட்ட போவதாக தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பா.ஜ.க கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில் பா.ஜ.கவை சேர்த்த திலிப் கோஷ், மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் கோவிலோ வசதியோ கட்டிக் கொள்வதற்கு எந்தவித பிரச்சனையும் கிடையாது. ஆனால் பாபரின் பெயரில் எந்தவித கட்டிடமும் கட்டுவதற்கு அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளார். ஏனென்றால் பாபருக்கு எதிராக இந்து சமயம் 450 ஆண்டுகள் போராடி அந்த கட்டிடத்தை இடித்து ராமர் கோவிலை கட்டியுள்ளது என்ன தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக மேற்கு வங்கத்தின் பா.ஜ.க செயலாளர் பிரியங்கா, முஸ்லிம்களை திருப்தி படுத்துவதற்காக ஹிமாயூன் கபீர் இவ்வாறு கூறியிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் குறிப்பிட்ட மதத்தை சார்ந்தவர்களாக இருப்பதாகவும், அவர்களிடம் பாபர் மசூதியை கட்ட சொல்லியது யார் என்று தெரிந்து கொள்ள விரும்புவதாகவும் கூறியுள்ளார். பாபர் எங்கிருந்து வந்தாரோ அங்குதான் மசூதி கட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.