திருப்பரங்குன்றம் வழக்கு தொடர்பாக தவறான கருத்துக்களை பரப்பி வருபவர்களை எச்சரித்த நீதிமன்றம்!!

By :  G Pradeep
Update: 2025-12-06 13:37 GMT

திருப்பரங்குன்றத்தில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றக் கோரி ரவிக்​கு​மார் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்ததைத் தொடர்ந்து தனி நீதிபதி விசாரணை நடத்தி தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவு அளித்தார். இந்த உத்தரவை தடை செய்யக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியரும், திருப்பரங்குன்றம் கோவிலின் செயல் அலுவலரும் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தனர்.

 அவர்கள் தீபத்தூணில் தீபம் ஏற்ற உரிமை அளிப்பதற்கு தனிநபருக்கு எந்தவித அனுமதியும் கிடையாது. அதனை கோவில் தேவஸ்தானம் தான் முடிவு செய்ய வேண்டும். அங்கு தீபம் ஏற்ற வேண்டும் என்பதற்கான எந்தவித கல்வெட்டுகளோ தரவுகளோ கிடையாது என்று தெரிவித்தனர். ஏற்கனவே தீபத்தூண் அமைந்திருக்கும் இடத்தில் மதப்பிரச்சனை ஏற்பட்டது.

 அதைக் கருத்தில் கொள்ளாமல் அங்கு தீபம் ஏற்றுவதற்கு தனி நபர் உத்தரவிடுவது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல என்றும் உடனடியாக உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. நீதிப​தி​கள் ஜி.ஜெயச்​சந்​திரன், கே.கே.​ராம கிருஷ்ணன் அமர்வு இது குறித்த விசாரணையை நடத்தினர். அவர்கள் இது குறித்து நிறைய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இடையீட்டு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர். 

இது வழக்கு குறித்து மேல்முறையீடு மனு தாக்கல் செய்ய நினைப்பவர்கள் செய்து கொள்ளலாம் என்றும், வரும் டிசம்பர் 12ஆம் தேதி வரை விசாரணை நடைபெறும் என்றும் தெரிவித்தனர். மேலும் அரசு வழக்கறிஞர்கள் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்கள் பகிரப்பட்டு வருவதாகவும் அவற்றை நீதிமன்றம் தடுப்பதற்கு அறிவுரைகள் வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர். 

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் எதுவும் தெரிவிக்கவில்லை என்பதற்காக எது வேண்டுமானாலும் செய்யலாம் என்பது தவறு. அனைத்து பிரச்சனைகளுக்கும் நீதிமன்றம் தான் இறுதி முடிவு. எனவே இந்த வழக்கு தொடர்பான உத்தரவை இப்போது வெளிகளில் பேசுவது மற்றும் சமூக வலைதளங்களில் தவறான விமர்சனங்களை பரப்பி வருவது போன்றவை ஏற்றுக் கொள்ளக் கூடியவை அல்ல என்று தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News