உள்ளூர் மக்கள் போல உ.பி-யில் ஊடுருவி வரும் வங்கதேசத்தினர், ரோஹிங்கியா!! உ.பி. முதல்வரின் இணையதள பதிவு!!
வங்க தேசத்தினர், ரோஹிங்கியாக்கள் உத்திர பிரதேசம் மாநிலத்தில் சட்டவிரோதமாக ஊடுருவி உள்ளூர் மக்கள் போல ஆதார் எண், வாக்காளர் அட்டை போன்ற இந்திய அடையாள ஆவணங்களைப் பெற முயற்சிப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து அதை தடுப்பதற்காக காவல்துறையினர் மற்றும் நிர்வாக துறையினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அடிப்படையில் சந்தேகப்படும் வகையில் உள்ள நபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து உத்திரபிரதேசத்தின் முதல்வர் ஆதித்யநாத் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், அரசானது மாநிலத்தின் பாதுகாப்பிற்கும், சமூக நல்லிணக்கத்திற்கும், சட்ட ஒழுங்கிற்கும் முன்னுரிமை அளித்து வருவதாகவும், சட்ட விரோதமாக வசிக்கும் வங்கதேசம், ரோஹிங்கியா ஊடுருவல்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
எனவே ஒரு நபரை பணியில் அமர்த்துவதற்கு முன்பாக அவர் குறித்த முழு அடையாளத்தையும் பரிசோதித்து அதன் பிறகு பணி அமர்த்த வேண்டும் என்றும், மாநிலத்தின் பாதுகாப்பு அனைவரின் கூட்டுப் பொறுப்பு என்று தெரிவித்துள்ளார்.