அரங்கேறிய காங்கிரஸ் கட்சியின் உண்மை நிலை!! வெளிச்சத்திற்கு வந்த இரண்டு அணிகளின் மோதல்!

By :  G Pradeep
Update: 2025-12-13 15:37 GMT

காங்கிரஸ் கட்சிக்குள் ராகுல் மற்றும் பிரியங்கா ஆகிய இரண்டு அணிகளுக்கும் இடையில் இருந்து வந்த மோதல் வெட்ட வெளிச்சமாக தெரியவந்துள்ளது. ஒடிசாவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முகமது மொக்குயிம், கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயை நீக்க வேண்டி சோனியா காந்திக்கு கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகியது. 

கார்கேயின் வயது 83 ஆகிய நிலையில் இளைய தலைவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அரசியலுக்கு வந்து தற்போது பொதுச்செயலாளராக இருந்து வரும் பிரியங்கா காந்தி வதேரா உட்பட இளைய தலைவர்களுக்கு கட்சியில் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனாவாலா, "காங்கிரஸ் கட்சிக்குள் ராகுல் மற்றும் பிரியங்கா ஆகிய இரண்டு அணிகளுக்கும் இடையில் இருக்கக்கூடிய மோதல்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருப்பதாக கூறியுள்ளார். 

 இதனைத் தொடர்ந்து மொக்குயிம் கடிதத்தில், காங்கிரஸ் தற்போது கடினமான காலகட்டத்தை சந்தித்து வருவதாகவும், பிரியங்கா காந்தி வதேரா தலைமை ஏற்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் உள்ளே நடப்பது தற்போது வெளியில் வந்து இருப்பதாக பாஜக கூறியுள்ளது.

Tags:    

Similar News