கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்..! வரலாற்றை திரும்பிப் பார்க்க வைத்த பா.ஜ.க!!

By :  G Pradeep
Update: 2025-12-13 18:24 GMT

கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க முன் இல்லாத வகையில் வரலாறு படைத்துள்ளது. 30 ஆண்டுகளாக சி.பி.எம் பக்கம் இருந்த திருவனந்தபுர மாநகராட்சியை தற்போது பா.ஜ.க கைப்பற்றியுள்ளது.

101 வார்டுகள் கொண்ட திருவனந்தபுரம் மாநகராட்சியில் 100 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 100 வார்டுகளில் 50 வார்டுகளை பா.ஜ.க கூட்டணி கைப்பற்றியுள்ளது.

கேரள மாநில வரலாற்றில் முதன் முறையாக பா.ஜ.க  மாநகராட்சியில் பெரும்பான்மை பெற்றுள்ளது. முன்னாள் போலீஸ் டி.ஜி.பி ஸ்ரீலேகா திருவனந்தபுரம் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பா.ஜ.க-என்.டி.ஏ கூட்டணிக்கு பெரும்பான்மை அளித்திருப்பது கேரள அரசியலில் முக்கியமான தருணமாக பார்க்கப்படுகிறது. மாநிலத்தின் வளர்ச்சி, தேவைகளை பா.ஜ.க-வால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர் என கூறி பிரதமர் மோடி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News