சங்கரமலைப்பட்டியில் திருடு போன கோவில் கலசம்!! கரூரில் ஏற்பட்ட பரபரப்பு!!
சவுந்தரநாயகி உடனுறை சங்கரேஸ்வரர் கோயில் கரூர் கிருஷ்ணராயபுரம் பகுதி சங்கரமலைப்பட்டியில் உள்ளது. இந்த கோவிலானது ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும், அந்த மலையில் பொன்னர், சங்கர் வாழ்க்கை வரலாறு குறித்த கல்வெட்டுகள் இருந்து வந்ததாகவும் இந்த கோவிலுக்கு 200 ஆண்டுகளுக்கு முன்பாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட நிலையில் தற்பொழுது கோவிலை சீரமைத்து மீண்டும் கும்பாபிஷேகம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி கோவிலின் கோபுர கலசமானது திருடு போனதாக கோவில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில் கோவில் கலசத்தில் இரிடியம் இருக்கும் என்று நினைத்து திருடர்கள் திருடி இருக்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது. எனவே இதேபோன்று பழைய ஜெயங்கொண்டம் அழகு நாச்சியம்மன் கோயில் கலசமானது திருடப்பட்ட நிலையில் மீண்டும் கோவில் வளாகத்திலேயே உடைக்கப்பட்ட நிலையில் வீசப்பட்டிருந்தது.
கோவில் கலசத்தில் இரிடியம் இல்லாததால் வீசப்பட்டிருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து கோவிலின் கலசத்தால் பகுதியை சுற்றி 5 கி.மீ தொலைவிற்கு இதுவரை இடி மின்னல் தாக்கியது கிடையாது என்று அப்பகுதியின் மக்கள் தெரிவித்து வருகின்றனர். பழமை வாய்ந்த கோவிலின் கலசமானது திருடு போனது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.