திருவையாறு திமுக எம்எல்ஏ ஓட்டி வந்த கார் விபத்து!! உயிரிழந்த விவசாயி!!
By : G Pradeep
Update: 2025-12-16 16:22 GMT
தஞ்சாவூரின் ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு நடுத்தெருவை சேர்த்த கோவிந்தராஜ் என்பவர் அதே ஊரில் விவசாயம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று வயலுக்கு வேலை செய்வதற்கு தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் செல்லும் பொழுது அவர் மீது தஞ்சாவூரின் திமுக மத்திய மாவட்ட செயலாளரும், திருவையாறு சட்டமன்ற உறுப்பினருமான துரை.சந்திரசேகரின் 4 சக்கர வாகனம் மோதியது. இந்த விபத்தில் காயமடைந்த கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கோவிந்தராஜின் உடலை மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் திமுக எம்எல்ஏவின் காரை பறிமுதல் செய்து ஒரத்தநாடு காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.