பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய ‘கிரேட் ஹானர் நிஷான் ஆப் எத்தியோப்பியா’ விருது வழங்கப்பட்டது.
எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது அலி, பிரதமர் மோடியை விமான நிலையத்துக்கே வந்து வரவேற்றார். இருவரும் ஒரே காரில் அறிவியல் அருங்காட்சியகம் சென்றனர்.
இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர், எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.
இதை தொடர்ந்து பிரதமர் மோடி, எத்தியோப்பியாவின் மிக உயர்ந்த சிவிலியன் விருது எனக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த மரியாதையை நான் மிகுந்த பணிவுடனும் நன்றியுடனும் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.
இந்த விருதைப் பெறும் முதல் வெளிநாட்டுத் தலைவர் பிரதமர் மோடி. வெளிநாடுகளில் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட விருதுகளில் இது 28-வது விருதாகும்.