இந்தியா-ஓமன் ஒப்பந்தம் மூலம் வரலாற்றுச் சிறப்புமிக்க பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் கையெழுத்து!
இந்தியா-ஓமன் இடையே ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் நடந்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களில் 98.08% பொருட்களுக்கு இறக்குமதி வரியில் இல்லை மற்றும் ஓமன் ஏற்றுமதி செய்யும் பொருட்களில் 77.79% பொருட்களுக்கு வரி விலக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தம், ஜவுளி, தோல், காலணிகள், ரத்தினங்கள், நகைகள், பொறியியல் பொருட்கள், பிளாஸ்டிக், விவசாய பொருட்கள், மருந்துகள், மருத்துவ சாதனங்கள், ஆட்டோமொபைல்கள் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய ஏற்றுமதித் துறைகள் முழுமையான சுங்கவரி விலக்கால் பயனடையும்.
வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கு முன் எப்போதும் இல்லாத சந்தை அணுகலை வழங்குகிறது என தெரிவித்துள்ளார்.