சுவர் இடிந்து மாணவர் உயிரிழப்பு!! நடந்து வரும் ஆய்வு மற்றும் விசாரணை!!

By :  G Pradeep
Update: 2025-12-20 17:48 GMT

திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்ததில் 11 வயது மாணவர் மோகித் உயிரிழந்தார்.

இதைதொடர்ந்து தேசிய பட்டியலின ஆணைய மண்டல இயக்குநர் ரவிவர்மன் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். கைப்பிடிச் சுவர் இடிந்த இடம், வகுப்பறைகளைப் பார்வையிட்டார். பள்ளிக் கட்டிடத்தின் தரம் குறித்து விசாரணை நடத்தினார். தலைமை ஆசிரியர், முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதன் பிறகு மாணவர் மோகித் வீட்டுக்கு ரவிவர்மன் சென்று, பெற்றோருக்கு ஆறுதல் கூறி, ஆய்வறிக்கை அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

திருத்தணி எஎல்ஏ சந்திரன் பள்ளி வளாகத்தில் ஆய்வு செஞ்சு, பழுதடைந்த கட்டிடங்களை அகற்ற சொல்லி அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News