ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு: "இந்தியா ஒரு இந்து நாடு"
By : G Pradeep
Update: 2025-12-22 16:15 GMT
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், "இந்தியா ஒரு இந்து நாடு, அதுக்கு அரசியலமைப்பு ஒப்புதல் தேவையில்லை" என்றார்.
கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "சூரியன் கிழக்கில்தான் உதிக்கிறது, அதுக்கு அரசியலமைப்பு ஒப்புதல் தேவையா?" என கேட்டார்.
இந்தியா ஒரு இந்து தேசம், இங்கு இந்து பண்பாடு முக்கியம் என்றார். ஆர்எஸ்எஸ் முஸ்லிம்களுக்கு எதிரான இயக்கம் இல்லை என்றும் தெரிவித்தார்.
மேலும் ஆர்எஸ்எஸ் பணிகளை நேரில் பாருங்கள், புரிந்துகொள்ளலாம் என்றார். அரசியலமைப்புல் இந்து தேசம் என சேர்க்கணுமா? வேணாமா? என்று நாடாளுமன்றம் முடிவு செய்யட்டும் என கூறினார். ஆர்எஸ்எஸ் பத்தி புரிந்துகொள்ள இன்னும் நிறைய இருக்கிறது, அதை நேரில் வந்து பாருங்கள் என கூறினார்.