திருப்பதி கோவிந்தராஜர் கோயில் தங்க தகடு மாயம்! நடந்துவரும் அதிரடி விசாரணை!

By :  G Pradeep
Update: 2025-12-24 16:49 GMT

திருப்பதி தேவஸ்தானத்தின் முக்கிய கோயிலான கோவிந்தராஜர் கோயில் விமான கோபுரத்தில் பதிக்கப்பட்ட 100 கிலோ தங்க தகடுகளில் 50 கிலோ தங்கம் மாயமாகியுள்ளது.

கடந்த 2022-23-ம் ஆண்டில் தங்க தகடுகள் பதிக்கும் பணி நடைபெற்றது. ஆனால், தற்போதைய பரிசோதனையில் 2 அடுக்கு தங்க தகடுகள் மட்டுமே பொருத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

விமான கோபுரத்தில் இருந்த சுமார் 30 சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன. அப்போதைய அறங்காவலர் குழுத் தலைவரும் ஜெகன்மோகன் ரெட்டியின் சித்தப்பாவுமான ஒய்.வி சுப்பா ரெட்டி, நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி ஆகியோர் இந்த விவகாரத்தை வெளியே வரவிடாமல் தடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

தற்போது தங்கம் மாயமான விவகாரம் குறித்து திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

Tags:    

Similar News