கேரளா திருவனந்தபுரம் மேயராக பாஜக வி.வி.ராஜேஷ் பதவியேற்பு!!

By :  G Pradeep
Update: 2025-12-27 17:48 GMT

கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக கணிசமான இடங்களில் வெற்றி பெற்றது. தலைநகர் திருவனந்தபுரம் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 101 வார்டுகளில் பாஜக 50 இடங்களை கைப்பற்றியது.


45 ஆண்டுகாக திருவனந்தபுரம் மாநகராட்சி மார்க்சிஸ்ட் கூட்டணியின் கோட்டையாக இருந்தது. முதல் முறையாக இந்த மாநகராட்சியை பாஜக கைப்பற்றி புதிய வரலாறு படைத்திருக்கிறது.

இந்நிலையில் திருவனந்தபுரம் மேயராக பாஜகவின் வி.வி.ராஜேஷ் நேற்று பதவியேற்றார்.

பதவியேற்ற பிறகு ராஜேஷ், "நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னேறுவோம். எல்லோரையும் இணைத்துக் கொண்டு பயணிப்போம்" என்றார்.


இந்த வெற்றி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பலனளிக்கும் என பாஜக.வினர் உற்சாகத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News