ஊடுருவல்காரர்கள் நாட்டுக்கு அச்சுறுத்தல்!! அமித் ஷா எச்சரிக்கை!!
By : G Pradeep
Update: 2025-12-30 11:53 GMT
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஊடுருவல்காரர்கள் நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அசாம் தலைநகர் குவஹாட்டியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித் ஷா, ஊடுருவல்காரர்களை கண்டறிந்து வெளியேற்ற நாங்கள் பாடுபடுவோம் என்றார்.
காங்கிரஸ் கட்சி ஊடுருவல்காரர்களை பல ஆண்டுகாக பாதுகாத்தது என்றும், அசாமில் இருந்து மட்டுமல்ல, நாடு முழுவதிலும் இருந்து ஊடுருவல்காரர்களை வெளியேற்றுவோம் என்றும் தெரிவித்தார்.
ஊடுருவல்காரர்கள் அசாமின் கலாச்சாரத்துக்கும் நாட்டின் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர் என்றார்.
கடந்த 10 ஆண்டுகளில் அசாமில் ஊடுருவல்காரர்களிடம் இருந்து 1,29,000 பிகா நிலங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன என்று அமித் ஷா தெரிவித்தார்.