சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர் போராட்டம்!!
சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் போராட்டம் நடத்த முயன்றவர்களை போலீஸார் கைது செய்தனர்.
தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் நீண்ட காலமாக தொடர்கிறது. நிரந்தர பணி, நிரந்தர வருமானம், அரசு ஊழியராக அங்கீகாரம் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 150 நாட்களாக போராடி வருகின்றனர்.
இதே நேரத்தில், சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் எழும்பூர் மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இது 5வது நாளாக தொடர்கிறது.
ஆசிரியர்களின் இந்த கோரிக்கை கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தது.
இன்று சென்னை எழும்பூர் அருகில் அமைந்துள்ள மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.