நிதி ஆயோக் கூட்டம்!! பிரதமர் மோடி தலைமையில் பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தீவிரம்!!

By :  G Pradeep
Update: 2026-01-01 10:13 GMT

பிரதமர் மோடி தலைமையில் நேற்று நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. 2026-27-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகள் நடந்து வரும் நிலையில், இந்த கூட்டம் நடைபெற்றது.


ஏற்றுமதியை அதிகரிப்பது, வேலைவாய்ப்பை உருவாக்குவது, முதலீடுகளை ஈர்ப்பது, திறன் மேம்பாடு, நாட்டின் பணியாளர் தொகுப்பில் பெண்களின் பங்கேற்பை அதிகரிப்பது போன்ற தலைப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.


மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தியா உலகின் 4-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. வரும் 2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா உருவாகும் என்று மத்திய அரசின் புள்ளிவிவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வரும் 2075-ம் ஆண்டில் உலகின் 2-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று சர்வதேச பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News