வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்!! குவஹாத்தி - கொல்கத்தா இடையே பிரதமர் மோடி தொடக்கம்!!
By : G Pradeep
Update: 2026-01-02 08:36 GMT
இந்திய ரயில்வேயின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை குவஹாத்தி மற்றும் கொல்கத்தா இடையே தொடங்கப்பட உள்ளது.
இந்த ரயிலின் கட்டணங்கள் விமானக் கட்டணத்தைக் காட்டிலும் மக்கள் எளிதில் அணுகும் வகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 3-அடுக்கு ஏசி (3AC) சுமார் ₹2,300, 2-அடுக்கு ஏசி (2AC) சுமார் ₹3,000, முதல் வகுப்பு ஏசி (1st AC) சுமார் ₹3,600.
இந்த ரயில் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் இயக்கப்படும். மொத்தம் 16 பெட்டிகள் (11 பெட்டிகள் 3AC, 4 பெட்டிகள் 2AC, 1 பெட்டி முதல் வகுப்பு ஏசி) இருக்கும்.
அதிநவீன வசதிகளான தானியங்கி கதவுகள், மேம்படுத்தப்பட்ட குஷன்கள் கொண்ட படுக்கைகள், சத்தம் குறைவாக இருக்கும் தொழில்நுட்பம், 'கவாச்' (Kavach) தொழில்நுட்பம், கிருமிநாசினி தொழில்நுட்பம், விமானங்களில் இருப்பதைப் போன்ற பயோ-வேக்குவம் கழிப்பறைகள் இந்த ரயிலில் இருக்கும்.