ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல் கொள்ளை!! தூய்மை பணியாளர் கைது!!
By : G Pradeep
Update: 2026-01-02 10:07 GMT
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் திறப்பின் போது காணிக்கை பணத்தை திருடிய தூய்மை பணியாளர் மணிகண்டன் கைது விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 30-ம் தேதி நடைபெற்ற உண்டியல் திறப்பில் சுமார் 2 கோடியே 9 லட்சத்து 80 ஆயிரத்து 165 ரூபாய் மற்றும் பலமாற்று பொன் இனங்கள் 85 கிராம், 5 கிலோ வெள்ளி பொருட்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன.
உண்டியல் எண்ணிக்கையின் போது காணிக்கை பணத்தினை மணிகண்டன் திருடியுள்ளார். இது தொடர்பான காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. அதில் மணிகண்டன் ஒரே நாளில் 3 முறை பணத்தினை திருடியது தெரியவந்தது.
போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான மணிகண்டனை தேடி வருகின்றனர். இவர் ஏற்கனவே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த 2023-ல் இங்கு பணிமாற்றம் செய்யப்பட்டார்.