சுசீந்திரம் தேர்த்திருவிழாவில் சர்ச்சை!! அமைச்சர் சேகர்பாபு மீது குற்றச்சாட்டு!!
By : G Pradeep
Update: 2026-01-04 17:53 GMT
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தேர்த்திருவிழாவில் பக்தர்கள் எழுப்பிய கோஷத்தால் அமைச்சர் சேகர்பாபு ஆவேசமடைந்தது சர்ச்சையானது.
பா.ஜ.க அமைப்பினர்தான் கோஷம் போட்டதாக தி.மு.க தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. அமைச்சர் தாமதமாக வந்ததுதான் பிரச்னைக்குக் காரணம் என அ.தி.மு.க எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் காலதாமதமாக வந்ததால் தேரோட்ட நிகழ்வு தொடங்குவது காலதாமதமானது என்றும், இது பக்தர்களின் மனதை புண்படுத்தியுள்ளது என்றும் தளவாய் சுந்தரம் கூறியுள்ளார்.
சுசீந்திரம் தெப்பக்குளத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்த நிலையில் இதுவரை சரிசெய்யப்படாமல் இருப்பதையும், கோயில் திருவிழாவிற்கு அரசு ஒதுக்கிய தொகை வெறும் இரண்டு லட்சம் ரூபாய்தான் என்பதையும் தளவாய் சுந்தரம் சுட்டிக்காட்டியுள்ளார்.