திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் பெயரை தவறாக பயன்படுத்தி மோசடி!! கோயில் நிர்வாகம் புகார்!!

By :  G Pradeep
Update: 2026-01-06 10:07 GMT

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் பெயர் மற்றும் அடையாளத்தை தவறாக பயன்படுத்தி சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான தகவல்களை பரப்பி பக்தர்களை தவறாக வழிநடத்தும் நபர்கள் மீது கோயில் நிர்வாகம் புகார் அளித்துள்ளது.


கோயில் நிர்வாகத்தின் அனுமதியின்றி சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


04.01.2026 அன்று சமூக ஊடகப் பக்கத்தில், மூலவர் சுப்பிரமணியருக்கு அபிஷேகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் பொருட்கள் பக்தர்களின் வீடுகளுக்கு நேரடியாக வழங்கப்படும் எனப் பொய்யான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.


அதிகாரப்பூர்வ தகவல்களுக்கு https://tiruchendurmurugan.hree.tn.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்துமாறு கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என கோயில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Tags:    

Similar News