சபரிமலை மகரவிளக்கு பூஜை!! பக்தர்கள் கூட்டத்தில் நெரிசல்!!

By :  G Pradeep
Update: 2026-01-07 03:56 GMT

சபரிமலை வழித்தடங்களில் இது வரை இல்லாத அளவுக்கு கூட்டம் திரண்டதால் நேற்று பெரும் நெரிசல் ஏற்பட்டது. குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு பக்தர்கள் திண்டாடினர்.


8 மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் 14-ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது.


இதற்காக கடந்த 30-ம் தேதி மாலை கோயில் நடை திறக்கப்பட்டது. இதுவரை சுமார் 6.5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.


உற்சவ நிகழ்ச்சிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளதால் பக்தர்கள் கூட்டம் கடந்த 2 நாட்களாகவே அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சபரிமலை வழித்தடங்களில் இதுவரை இல்லாத கூட்டம் நேற்று இருந்தது.

Tags:    

Similar News