திமுக ஆட்சியில் ஊழல் நடப்பதாக ஆளுநரிடம் புகார் அளித்த அதிமுக!!
By : G Pradeep
Update: 2026-01-07 07:30 GMT
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, திமுக ஆட்சியில் நான்கரை ஆண்டுகளில் ரூ.4 லட்சம் கோடி ஊழல் நடைபெற்றதாக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் புகார் அளித்தார்.
ஊழல் விசாரணைக்கு உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
திமுக ஆட்சியில் ஊழல் மட்டுமே நடைபெற்றுள்ளது, மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என பழனிசாமி கூறினார்.
திமுக எம்எல்ஏவுக்கு சொந்தமான மருத்துவமனை என்பதால் கிட்னி முறைகேடு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என பழனிசாமி குற்றச்சாட்டு எழுப்பினார்.
வரும் தேர்தலில் அதிமுக தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என பழனிசாமி தெரிவித்தார்.