ஸ்டாலின் அரசின் ஏமாற்று வேலை! பாஜக தலைவர் கே.பி.ராமலிங்கம் கண்டனம்!!
By : G Pradeep
Update: 2026-01-09 06:34 GMT
பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், தமிழக அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை கண்டித்துள்ளார்.
மத்திய அரசின் திட்டத்தை நகலெடுத்து, அதில் ஸ்டிக்கர் ஒட்டியது போல் உள்ளதாக கூறியுள்ளார்.
பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என 2021 தேர்தலின் போது திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், இப்போது அந்த வாக்குறுதியைத் துரோகம் செய்துவிட்டு, புதிய நாடகத்தை அரங்கேற்றியுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
அரசு ஊழியர்கள் இனியும் ஏமாற வேண்டாம் என்று கே.பி.ராமலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக அரசின் இந்த அறிவிப்பில் தெளிவான விவரங்கள் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.