ஆசிரியர் கண்ணன் மரணத்திற்கு அரசின் அலட்சியம் தான் காரணமென கண்டனம்!!

By :  G Pradeep
Update: 2026-01-17 14:12 GMT

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த உடற்கல்வி பகுதி நேர ஆசிரியர் கண்ணன், சென்னையில் நடந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்டு வானகரம் பகுதியில் உள்ள மண்டபத்தில் அடைக்கப்பட்டிருந்தார். அங்கு வார்னிஷ் குடித்து தற்கொலைக்கு முயன்றார். சிகிச்சை பலனின்றி கண்ணன் உயிரிழந்தார்.


கண்ணன், 2013-ல் பகுதிநேர ஆசிரியராக பணிக்கு சேர்ந்தார். இவருக்கு சிவராதை என்ற மனைவியும், +2 படிக்கும் மகனும் உள்ளார். 


ஆசிரியர் சங்கத்தினர், “அரசின் அலட்சியமே இந்த உயிரிழப்புக்குக் காரணம்” என குற்றம்சாட்டினர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


கண்ணனின் மரணம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியர் கண்ணனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ளது.

Tags:    

Similar News