இண்டிகோ விமான நிறுவனத்திற்கு அபராதம்!! டிஜிசிஏ நடவடிக்கை!!
By : G Pradeep
Update: 2026-01-20 10:16 GMT
இண்டிகோ விமான நிறுவனத்திற்கு டிஜிசிஏ ரூ.22.20 கோடி அபராதம் விதித்துள்ளது. கடந்த டிசம்பர் 3-5, 2025 வரையிலான நாட்களில் இண்டிகோ விமானங்கள் பெரிய அளவில் ரத்து மற்றும் தாமதம் ஆனதால், 3 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
இண்டிகோ நிறுவனம், தேவைக்குமேல் செயல்பாடுகளை அதிகப்படுத்தியது, போதிய முன்னேற்பாடுகள் இல்லை, மென்பொருள் அமைப்புகளில் பலவீனம் மற்றும் மேலாண்மை கண்காணிப்பில் குறைபாடு ஆகியவை இந்த நெருக்கடிக்கான முக்கிய காரணங்களாக சுட்டிக்காட்டப்பட்டன.
டிஜிசிஏ உத்தரவுகளை முழுமையாக இண்டிகோ நிர்வாகம் பின்பற்றி தேவையான நடவடிக்கைகள் எடுப்பதாக தெரிவித்துள்ளது.