திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.1 கோடி காணிக்கை வழங்கிய பக்தர்!

Update: 2021-06-19 09:00 GMT

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.1 கோடி நிதி வழங்கியுள்ளார்.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் அனப்பர்த்தி பகுதியைச் சேர்ந்த ஒரு தனியாா் நிறுவன உரிமையாளரும், பக்தருமான டி.உபேந்திராரெட்டி என்பவர் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் ஸ்ரீவெங்கடேஸ்வரா வித்யாதான அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி காணிக்கை வழங்கியுள்ளார்.

இந்த தொகையை வரைவோலையாக அளித்தார். அந்தக் காணிக்கையை திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் வைத்து பெற்றுக்கொண்டார்.

Similar News