என்ன ஆனது 10 கோடி ரூபாய்? சூப்பர் கம்ப்யூட்டர் எங்கே? திமுக அரசிற்கு அண்ணாமலை கேள்வி!
சென்னையில் செய்த கனமழை என்பது காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டது கணிக்க முடியாதது என திமுக அரசு கூறி வருகிற நிலையில் கம்ப்யூட்டருடன் நவீன வானிலை ஆய்வு மையம் அமைக்க ஒதுக்கப்பட்ட 10 கோடி ரூபாய் என்ன ஆனது என்று கேள்வி எழுப்பி உள்ளார் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
நேற்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தவர், எவ்வளவு மழை பெய்யக்கூடும், ஒரு இடத்தில் எத்தனை சென்டிமீட்டர் மழை பெய்யும், பாதிப்பு எவ்வளவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை செய்யும். தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு தனது முதல் பட்ஜெட்டில் அப்போதைய நிதி அமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜன் கிட்டத்தட்ட 10 கோடி ரூபாயை அதிநவீன வானிலை மைய சூப்பர் கம்ப்யூட்டருக்காக ஒதுக்குவதாக தெரிவித்தார். ஆனால் அதற்குப் பிறகு அவரது இலாகா மாற்றப்பட்டது! இந்த நிலையில் அந்த பணம் என்ன ஆனது? சூப்பர் கம்ப்யூட்டர் ஏன் வாங்கவில்லை? சூப்பர் கம்ப்யூட்டருகாக ஒதுக்கப்பட்ட ரூபாய் 10 கோடிக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்! என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும், தென் மாவட்ட மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் எதையும் கண்டுகொள்ளாமல் முதல்வர் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக டெல்லிக்கு சென்றது தென் மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.
Source : Dinamalar