கிறிஸ்துவ மதத்திற்கு மாறினால் 10 கோடி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட தஞ்சாவூர் இளைஞர் கைது..!

Update: 2024-04-29 11:59 GMT

வெளிநாட்டில் வசிப்பவர்களுடன் பேசுவதற்கு பயன்படுத்தப்படும் ஐஎம்ஓ என்ற செயலி மூலமாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு சொக்கநாதன் என்ற ஐடியில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் இந்து மதத்திலிருந்து விலகி கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் ரூபாய் 10 கோடி தருவதாக சொக்கநாதன் ஐடி மூலமாக பேசியவர் கூறியுள்ளார். 

அதோடு அமெரிக்காவில் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் வருமான வரி செலுத்த வேண்டும் என்று அந்த இளைஞரிடம் பணம் கேட்டுள்ளார், அதனை நம்பிய கோவில்பட்டியை சேர்ந்த இளைஞரும் சொக்கநாதன் என்ற ஐடி மூலம் பேசியவருக்கு 4,88,159 ரூபாயை ஜிபே மூலம் அனுப்பி உள்ளார். இதற்குப் பிறகு கோவில்பட்டி இளைஞரால் அந்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை! 

அப்பொழுதுதான் அந்த இளைஞர் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்து பிறகு தேசிய சைபர் குற்றப்பிரிவு இணைய தளத்தில் புகார் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு ஏ டி எஸ் பி உன்னிகிருஷ்ணன் மற்றும் ஆய்வாளர் ஜோஸ்லின் அருள் செல்வி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மதம் மாறினால் பணம் தருவதாக மோசடியில் ஈடுபட்டவர் தஞ்சாவூர் ரெட்டிபாளையம் சாலை ஆனந்தம் நகரை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் மகன் ராஜவேலன் என்பதை கண்டறிந்துள்ளனர். அதனால் அவரை கைது செய்து போலீசார் இதுகுறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Source : The Hindu Tamil thisai 

Similar News