கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் 10 லட்சம்.. கோவில் பணியின் போது இறந்ததால் நிவாரணம் வழங்குமா தி.மு.க? இந்து முன்னணி கேள்வி..

Update: 2024-07-31 02:14 GMT

சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் புனரமைப்பு பணிகள் நடந்து வருவதின் அங்கமாக அப்பகுதியைச் சேர்ந்த பழனி என்பவர் திருக்கோவிலின் கோபுரத்தில் உள்ள புனரமைப்பு வேலைகளை செய்வதற்காக கோபுரத்தின் மீது ஏறி உள்ளார். அப்போது துரதிஷ்டவசமாக கோபுரத்திலிருந்து தவறி விழுந்த பழனியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். இச்செய்தி அப்பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஒரு சம்பவத்தில் இந்து முன்னணி தன்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், அறநிலையத் துறையின் அலட்சியப் போக்கையும் கண்டித்து இருக்கிறது. இது தொடர்பாக இந்து முன்னணியினர் கூறும் பொழுது, "தனி நபருக்கு சொந்தமான இடங்களில் இது போல் வேலை நேரங்களில் முறையான பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் பணியாட்கள் மரணமடைய நேர்ந்தாலோ அல்லது காயமுற்றாலோ அதற்கு அந்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.


ஆனால் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இத்திருக்கோவிலில் கோபுரத்தின் மீது வேலை செய்யும் நபருக்கு முறையான எந்த பாதுகாப்பு உபகரணங்களும், கொடுக்கப் படவில்லை. கவனக்குறைவாக செயல்பட்ட உரிய அதிகாரிகளின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதோடு இச்சம்பவத்தில் உயிரிழந்த பழனி அவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து முறையான இழப்பீடு வழங்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்துகிறது.


மேலும் இது போல் வேறு எங்கும் நடைபெறாமல் இருக்க பிற கோவில்களில் நடைபெறும் வேலைகளில் பணி செய்பவர்களுக்கு உரிய பாதுகாப்பை இந்து சமய அறநிலையத்துறை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. கள்ளக்குறிச்சி சம்பவத்தில் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் வழங்கிய இந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு திருக்கோவிலில் பணி செய்த போது உயிரிழந்தவருக்கு உரிய நிவாரணம் வழங்குமா?" என்று மக்கள் கேள்வி எழுப்பி வருவதாகவும் இந்து முன்னணி சுட்டிக்காட்டி இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News