அமெரிக்க வரி விதிப்பை தொடர்ந்து 10 நாடுகளுடன் வர்த்தகம்!! ஆதித்யநாத் தகவல்!!
By : G Pradeep
Update: 2025-10-13 13:40 GMT
உத்திர பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் பதோஹியில் நான்காவது தரை விரிப்பு கண்காட்சியை நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். அப்போது அவர் அமெரிக்கா இந்தியா மீது அதிக அளவில் வரி விதித்தது ஒரு நாட்டின் முடிவு தான் என்று கூறினார். ஆனால் இதைத் தொடர்ந்து இந்தியா பத்து நாடுகளுடன் வர்த்தக ரீதியான தொடர்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் மிகவும் முக்கியமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இங்கிலாந்து போன்ற சில நாடுகளுடன் இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இது இந்தியாவின் தொழில் துறைக்கு மிக முக்கியமான புதிய வாய்ப்புகளை உருவாக்கி இருப்பதாக தெரிவித்தார்.