கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா கண்ட பொருளாதார முன்னேற்றமும் மோடியின் சபதமும்!
வளர்ந்த பாரதம் எனும் கூட்டு இலக்கு எட்டப்படும் வரை ஓய மாட்டேன் என பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி கடந்த 2001 ஆம் ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி முதல் முதலாக குஜராத் முதல் மந்திரியாக பதவியேற்றார். 2014 ஆம் ஆண்டு வரை அந்த பதவியை அலங்கரித்த அவர் பின்னர் நாட்டின் பிரதமர் ஆனார். அந்த பதவியிலும் 10 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறார். இதன் மூலம் குஜராத் முதல் மந்திரி மற்றும் நாட்டின் பிரதமர் என அரசின் தலைவராக 23 ஆண்டுகளை அவர் நிறைவு செய்து உள்ளார். இதை ஒட்டி அவருக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
அந்த வகையில் உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் 23 ஆண்டுகளாக சோர்ந்து போகாமல் தன்னை பற்றி கவலைப்படாமல் தேசத்திற்காகவும் மக்களுக்காகவும் இடையறாது உழைத்து வரும் தேசத்தை கட்டி எழுப்பிய பிரதமர் மோடியை வாழ்த்தியதாக குறிப்பிட்டுள்ளார். இதைப்போல மத்திய மந்திரிகள் பா.ஜனதா தலைவர்கள் என ஏராளமானோர் மோடிக்கு வாழ்த்து பதிவு. இதற்காக மகிழ்ச்சி வெளியிட்டுள்ள பிரதமர் மோடி கடந்த 23-ம் தேதி ஏராளமான பணிகள் நடந்துள்ளதாகவும், இன்னும் ஏராளமான பணிகள் இருப்பதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
ஒரு அரசின் தலைவராக இருபத்தி மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை ஒட்டி எனக்கு வாழ்த்தும் ஆசியும் வழங்கிய அனைவருக்கும் இதயபூர்வ நன்றிகள் .குஜராத் முதல் மந்திரியாக பணியாற்றும் பொறுப்பை 2001 ஆம் ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி ஏற்றுக்கொண்டேன். என்னை போன்ற ஒரு பணிவான தொண்டனை மாநில நிர்வாகத்துக்கு தலைமை தாங்கும் பொறுப்பை வழங்கியது எனது பா.ஜ.க.வின் மகத்துவம் ஆகும் .நான் முதல் மந்திரியாக பொறுப்பேற்ற போது குஜராத் பல சவால்களை எதிர்கொண்டது. கட்ச் பூகம்பம், அதற்கு முன்பு ஒரு மிகப்பெரிய புயல், மாபெரும் வறட்சி, பல்லாண்டுகளாக காங்கிரஸின் கொள்ளை, வகுப்பு வாதம் மற்றும் சாதிவெறி போன்ற தவறான நிர்வாகத்தின் மரணங்கள் என எண்ணற்ற சவால்கள் இருந்தன.