கடந்த 10 ஆண்டுகளில் பிரதமரின் ஜன் ஆஷாதி மையங்கள் மூலம் ரூ.30,000 கோடி சேமித்த மக்கள்!மேலும் 10,000 மையங்கள் திறக்க திட்டம்!

Update: 2025-03-28 17:04 GMT
கடந்த 10 ஆண்டுகளில் பிரதமரின் ஜன் ஆஷாதி மையங்கள் மூலம் ரூ.30,000 கோடி சேமித்த மக்கள்!மேலும் 10,000 மையங்கள் திறக்க திட்டம்!

மார்ச் 2025 காலக்கெடுவிற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே பிரதான் மந்திரி பாரதிய ஜனௌஷதி பரியோஜனா கீழ் 15,000 ஜன் ஔஷதி கேந்திராக்களை நிறுவுவதற்கான இலக்கை மத்திய அரசு வெற்றிகரமாக அடைந்துள்ளது

பிப்ரவரி 28 ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் மொத்தம் 15,057 ஜன் ஔஷதி கேந்திரா மையங்கள் செயல்பட்டு வருவதாக இன்று மார்ச் 28 நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது 31.3.2025க்குள் நாடு முழுவதும் 15,000 ஜன் ஔஷதி கேந்திரா மையங்களைத் திறக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

ஆனால் இந்த இலக்கு ஜனவரி 2025 இல் அடையப்பட்டது. மேலும் 28.2.2025 நிலவரப்படி நாடு முழுவதும் மொத்தம் 15,057 ஜன் ஔஷதி கேந்திரா மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டா மக்களவையில் தெரிவித்துள்ளார் மார்ச் 2026க்குள் ஜன் ஆஷாதி மையங்களின் வலையமைப்பை 20,000 ஆகவும் மார்ச் 2027க்குள் 25,000 ஆகவும் அதிகரிக்க அரசாங்கம் இப்போது இலக்கை நிர்ணயித்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார் 

இறுதியாக அமைச்சரின் கூற்றுப்படி கடந்த 10 ஆண்டுகளில் பிரதமரின் இந்த திட்டம் மூலம் ரூ.6,975 கோடி மதிப்புள்ள மருந்துகள் MRP அடிப்படையில் விற்கப்பட்டுள்ளன இதன் விளைவாக பிராண்டட் மருந்துகளின் விலைகளுடன் ஒப்பிடுகையில் குடிமக்களுக்கு சுமார் ரூ.30,000 கோடி சேமிக்கப்பட்டுள்ளது

Tags:    

Similar News