அறநிலையத்துறையின் ஆடி தள்ளுபடி அதிரடி ஆஃபர்.. தரிசனக் கட்டணம் வெறும் ரூ.100 மட்டுமே!- இந்துமுன்னணி காட்டம்..
ஆடிக் கிருத்திகை காரணமாக திருத்தணியில் ஸ்ரீமுருகனை தரிசனம் செய்ய 200 ரூபாய் சிறப்பு தரிசன கட்டணத்திற்கு பதிலாக நூறு ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். இது தொடர்பாக இந்து முன்னணியினர் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள் அதில் அவர்கள் கூறும் பொழுது, "ஆடி கிருத்திகையை காரணம் காட்டி திருத்தணியில் முருகப்பெருமானை தரிசிக்க இருநூறு ரூபாய் கட்டணத்திற்கு பதிலாக தற்போது 100 ரூபாய் கட்டணம் வசூலிக்க தயாராகி இருக்கிறது அறநிலையத்துறை. ஏற்கனவே இந்து சமய அறநிலைத்துறைக்கு உட்பட்ட கோயில்களில் வாகன நிறுத்தத்திற்கு கட்டணம், தேங்காய் உடைக்க கட்டணம் என கொள்ளை நீளுகிறது.
மணிக்கணக்கில் காசு இல்லாதவர்கள், கடவுளை தரிசனம் செய்ய காத்து கிடக்கிறார்கள். சிறப்பு தரிசனம் என்ற பெயரில் கட்டணம் வசூல் செய்து கோவிலுக்குள் பாகுபாட்டை வளர்கிறது அறநிலையத்துறை. தன்னுடைய கல்லாப்பெட்டியை நிரப்பும் நோக்கில் அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது. மேலும் சிறப்பு தரிசன கட்டணத்தை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என தமிழக பக்தர்கள் கோரிக்கை வைத்து காத்து கிடக்கும் வேளையில், தேர்தல் கால அறிவிப்பு போல, ஆடி கிருத்திகைக்கு திருத்தணியில் 100 ரூபாய் கட்டணம் போதும் என அறிவித்திருக்கிறார் அமைச்சர் சேகர்பாபு.
ஆனால் திருத்தணி முருகப்பெருமான் திருக்கோவிலில் இருநூறு ரூபாய் கட்டணமே கிடையாதாம் இந்த கண்துடைப்பு நாடகம் எல்லாம் இனி இந்துக்களிடம் பலிக்காது. பொருட்களை ஆடி மாதத்தில் தள்ளுபடி விற்பனை செய்வது போன்று, கடவுளை தரிசனம் செய்ய தள்ளுபடியில் தரிசன கட்டணத்தை குறைத்து இருக்கும் சேகர் பாபுவின் செயல் நகைப்புக்குரியதாகும்" என்று கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறார்கள்.
Input & Image courtesy: News