நடப்பு நிதியாண்டில் நிலக்கரி உற்பத்தியில் 100 கோடி டன்னைக் கடந்து சாதனை படைத்த இந்தியா!
இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி நடப்பு நிதி ஆண்டில் 100 கோடி டன்னைக் கடந்துள்ளது. இதை பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.;

உலகின் ஐந்தாவது மிகப் பெரிய பொருளாதார நாடான இந்தியா நிலக்கரி உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. நாட்டின் மின் உற்பத்தி மற்றும் பல்வேறு தொழில்துறையின் முக்கிய ஆதாரமாக இந்த நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. நாட்டின் நிலக்கரி உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 2023-24 ஆம் நிதி ஆண்டில் 99.78 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டது. இது நடப்பு நிதியாண்டில் 100 கோடி டன் உற்பத்தியை கடந்துள்ளது. நடப்பு நிகழ்வு வருகிற 31-ஆம் தேதி நிறைவடையும் நிலையில் அதற்கு முன்னரே 100 கோடி டன் உற்பத்தி எட்டப்பட்டுள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க இந்த சாதனையை மத்திய நிலக்கரித்துறை மந்திரி கிருஷ்ணன் ரெட்டி வெளியிட்டுள்ளார். இது குறித்து மேலும் அவர் தனது எக்ஸ்தளத்தில் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் திறமையான நடவடிக்கைகள் மூலம் இந்தியா தனது நிலக்கரி உற்பத்தியை அதிகரித்து இருப்பது மட்டுமின்றி நிலையான மற்றும் பொறுப்பான சுரங்கத் தொழிலையும் உறுதி செய்து இருக்கிறது என குறிப்பிட்டு இருந்தார். மேலும் அவர் இந்த சாதனை நமது அதிகரித்து வரும் மின் தேவைகளை பூர்த்தி செய்யும். அத்துடன் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்து ஒவ்வொரு இந்தியருக்கும் பிரகாசமான எதிர்காலத்தையும் உறுதி செய்யும் என்று கூறுகிறார்.
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா ஒரு உலகளாவிய எரிசக்தி தலைமையாக உருவெடுத்து வருவதாக கூறியிருந்த கிஷன் ரெட்டி இந்த மைல்கல்லை எட்ட உதவிய சுரங்கத் துறை தொழிலாளர்களையும் பாராட்டி இருந்தார். நிலக்கரி உற்பத்தியில் இந்தியாவின் வரலாற்று சாதனையை பிரதமர் மோடி பாராட்டி உள்ளார். மந்திரி கிருஷ்ணன் ரெட்டியின் பதிவுக்கு பதில் அளிக்கும் வகையில் தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி கூறியிருந்ததாவது:-
நடப்பு நிதியாண்டில் நிலக்கரி உற்பத்தி 100 கோடி தன்னை கடந்து இருப்பது இந்தியாவுக்கு ஒரு பெருமை மிகுந்த தருணம் ஆகும்.இந்த மகத்தான மைல்கல்லைக் கடந்தது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். இது எரிசக்தி பாதுகாப்பு பொருளாதார வளர்ச்சி மற்றும் தன்னம்பிக்கைக்கான நமது உறுதிபாட்டை எடுத்துக்காட்டுகிறது. நிலக்கரி சுரங்கத் துறையுடன் தொடர்புடைய அனைவரின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பையும் இந்த சாதனை பிரதிபலிக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியிருந்தார்.