ஒரு நாளுக்கு 1000 டன் - ஸ்டெர்லைட்டுக்கு திரவ ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரும் வேதாந்தா!

Update: 2021-04-20 14:27 GMT

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலின்‌ இரண்டாவது அலையால் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது இதனால் மருத்துவமனைகள் படுக்கை வசதி வென்டிலேட்டர் ஆக்சிஜன் உள்ளிட்டவை இன்றி தவித்து வருகின்றன குறிப்பாக திரவ ஆக்சிஜன் உற்பத்தி போதுமான அளவு இல்லாததால் ஆக்சிஜன் குறைவால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதை சரி செய்ய மத்திய மாநில அரசுகள் பல போர்களை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தொழில் நிறுவனங்கள் அனைத்துக்கும் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்கும் மாறும் இதற்கான அனுமதி கோரும் நிறுவனங்களுக்கு தற்காலிக அனுமதி அளிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டுள்ளன மகாராஷ்டிர மாநிலத்தில் இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டபோது ரிலையன்ஸ் நிறுவனம் தனது தொழிற்சாலைகளிலிருந்து திரவ ஆக்சிஜன் வழங்கி உதவியது.

அதே போன்று தற்போது தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் ஒரு நாளுக்கு 1000 டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யக் கூடிய திறன் கொண்ட அலகுகள் உள்ளதாகவும், இவற்றை செயல்பட அனுமதி அளித்தால் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும் திரவ ஆக்சிஜனை அனுப்பி உதவ முடியும் என்றும் வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான பணிகள் குறித்து ஆலோசனை செய்த தமிழக முதல்வர் திரவ ஆக்சிஜன் சப்ளை செய்ய முன்வரும் நிறுவனங்களுக்கு தற்காலிக உரிமம் வழங்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. எனினும் ஸ்டெர்லைட் நிறுவனத்தை மீண்டும் திறப்பது குறித்த மனு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ளதால் மத்திய அரசிடமும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனிடமும் வோதாந்தா நிறுவனம் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது என்று NGOக்கள் குற்றச்சாட்டு வைத்து, போராட்டம் நடத்தி அதில் அப்பாவி உயிர்களும் பலியான நிலையில் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது. இதனால் அது வரை வெளிநாடுகளுக்கு செம்பு உலோகத்தை ஏற்றுமதி செய்து வந்த இந்தியா தற்போது இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் வேதாந்தா நிறுவனம் இந்த கடினமான சூழலைக் கருதி திரவ ஆக்சிஜன் தயாரிக்க முன்வந்துள்ளது வரவேற்பைப் பெற்றுள்ளது.

Tags:    

Similar News