கோவையில் 1000 பேருக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய "மோடி கிட்" வழங்கிய அண்ணாமலை!
இந்த கொரோனா காலத்தில் பா.ஜ.க கட்சியை சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்த வகையில் இன்று பா.ஜ.க-வின் மாநில துணை தலைவர் அண்ணாமலை 1000 பேருக்கு அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய "மோடி கிட்" வழங்கியுள்ளார்.
இன்று ஆர்.எஸ் புறம் மண்டலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 1000 பேருக்கு அண்ணாமலை "மோடி கிட்" வழங்கினார். இந்த மோடி கிட்டில் அரிசி, பருப்பு உள்ளிட்ட வீட்டிற்கு தேவையான பொருட்கள் அடங்கி உள்ளது. இந்த நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கோயம்பத்தூர் பா.ஜ.க தொண்டர்கள் உடன் மாவட்ட தலைவர் நந்தகுமாரும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
இது குறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் " இன்று கோவை பா.ஜ.க தொண்டர்கள் இணைந்து ஆர்.எஸ்.புரம் மண்டலத்தில், 1000 பேருக்கு "மோடி கிட்(Modi kit )" கொடுத்தோம். இதில் அரிசி , பருப்பு உள்ளிட்ட வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் உள்ளது. ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு இது நிச்சயமாக பயன்படும்." என்று அவர் குறிப்பிட்டார்.