வருமானம் இல்லாத கோவில் என அறநிலையத் துறையால் கைவிடப்பட்ட 1,100 ஆண்டு பழமையான கோயில்!

Update: 2023-11-23 01:59 GMT

வருமானம் இல்லாத கோவில் என்பதால் இந்து சமய அறநிலையத்துறை இந்த கோவிலை கண்டுகொள்ளவில்லை என பக்தர்கள் வருத்தம்!

கரூரிலிருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் அமராவதி நதி மற்றும் சோமனூர் காவிரி ஆகிய இரண்டு நதிகளுக்கு இடையில் அமைந்துள்ள கோவில் தான் சோமேஸ்வரர் கோவில்! இந்த கோவில் இந்த சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கிட்டத்தட்ட ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்பு அதாவது தஞ்சை பெரிய கோவிலுக்கு முன்பாகவே இந்த கோவில் கட்டப்பட்டதாகவும் மதுரை கொண்ட கோபரகேசரி முதலாம் பராந்தக சோழனின் ஆறாவது ஆட்சி ஆண்டிற்கு முந்தையது என்றும் கூறப்படுகிறது. 

மேற்கு திசை பார்த்தபடி சிவாலயமும் கருவறை மற்றும் அர்த்தமண்டபமும் உள்ளது வழக்கத்தைவிட இந்த கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கருவறையானது அர்த்தமண்டபத்தை விட அகலமாக உள்ளது. மேலும் கோவிலில் வீற்றிருக்கும் சோமேஸ்வரர் சந்திரனை வழிபட்டு சாப விமோசனம் அடைந்தார் என்று கூறப்படுகிறது, இதனால் இந்த ஆலயம் சந்திர ஸ்தலமாகவும் அறியப்படுகிறது.

இத்தகைய பெருமைகளையும் பல கடவுள்களின் சிலைகளையும் கொண்ட சோமேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு பல ஆண்டுகளாகியுள்ளதால் விமானத்தின் உச்சியில் இருக்கும் கும்பம் இங்கு இருப்பதில்லை. பல தெய்வங்களின் சிலைகளும் சரியாக பராமரிக்கப்படாமல் தரையில் உடைந்து கிடக்கிறது. இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் இந்த கோவில் வருமானம் இல்லாததால் கண்டு கொள்வதில்லை என்று பக்தர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். 

மேலும் இங்கு உள்ள மக்கள் ஒன்று சேர்ந்து கோவில் திருப்பணி மூலம் கோவிலை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டாலும் அதற்கான அனுமதியை அறநிலையத்துறை அதிகாரிகள் தருவதில்லை என்றும் பக்தர்கள் கூறியுள்ளனர். 

Source : Dinamalar 

Similar News